Home கன்னியாகுமரி செய்திகள் குமரியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார்: மாமனார், கணவர், மாமியார் மீது வழக்குப் பதிவு!

குமரியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை புகார்: மாமனார், கணவர், மாமியார் மீது வழக்குப் பதிவு!

0
மணவாளக்குறிச்சி அருகே இளம்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் மாமனார் உள்ளிட்ட மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு
மணவாளக்குறிச்சி அருகே இளம்பெண் அளித்த புகாரின் பேரில் மாமனார், கணவர் மற்றும் மாமியார் ஆகிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே வசிக்கும் 21 வயது இளம்பெண், உடல் பரிசோதனைக்காகத் தக்கலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அங்கு தான் இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் எனவும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர்கள், மணவாளக்குறிச்சி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், தாயை இழந்து, தந்தையின் ஆதரவின்றி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த இளம்பெண், 25 வயது இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்குப் பாட்டி எதிர்ப்பு தெரிவித்ததால், ஐந்து மாதங்களுக்கு முன்பு இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் கணவரின் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளார். இளம்பெண்ணின் 54 வயது மாமனார் கராத்தே மாஸ்டராகவும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் இரவுக் காவலாளியாகவும் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக மாமனார் தன்னை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் கர்ப்பமடைந்த தாகவும் இளம்பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கணவர் மற்றும் மாமியாரிடம் தெரிவித்தபோது, அவர்கள் மாமனாருக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், சம்பவத்தை வெளியே கூறக்கூடாது என மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் மருத்துவமனைக்குச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இளம்பெண்ணின் புகாரின் அடிப்படையில் மாமனார், கணவர் மற்றும் மாமியார் ஆகிய மூவர் மீதும் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள 3 பேரையும் இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிர மாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மணவாளக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version