சென்னை: பாஸ்போர்ட் சேவை அலுவலகத்தில் பழங்குடியினர் தயாரிப்பு விற்பனை மையம் திறப்பு

0
25

சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்​தில், பழங்​குடி​யினர் தயாரிப்பு பொருட்​களின் விற்​பனை மையம் திறக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை மண்டல பாஸ்​போர்ட் அலு​வல​கத்​தில், மக்​கள் சேவை​களை மேம்​படுத்​தும் நோக்​கில், பல்​வேறு சமூக முன்​னெடுப்புகள் மேற்​கொள்​ளப்​படு​கிறது.

இதன் ஒரு பகு​தி​யாக, சென்​னை, சாலிகி​ராமத்​தில் உள்ள பாஸ்​போர்ட் சேவை மைய அலு​வல​கத்​தில், பழங்​குடி​யினர் கூட்​டுறவு சந்தை மேம்​பாட்​டுக் கூட்​டமைப்பு சார்​பில், பழங்​குடி​யினர் உற்​பத்தி பொருட்​களின் விற்​பனை மையம் தொடங்​கப்​பட்​டுளளது.

இந்த விற்​பனை மையத்​தில் கைவினைப் பொருட்​கள், கைத்​தறி பொருட்​கள், இயற்கை உணவுப் பொருட்​கள் மற்​றும் காட்டு வளப் பொருட்​கள் விற்​பனை செய்​யப்​படு​கின்​றன.

இதன்​மூலம், பழங்​குடி​யினர் சமூகங்​களின் சமூக-பொருளா​தார முன்​னேற்​றத்தை ஊக்​கு​விப்​பதுடன், அவர்​களின் தயாரிப்​பு​களுக்கு நேரடி விற்​பனை வாய்ப்​பு​களை உரு​வாக்க முடி​யும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இந்த நிகழ்​வில், இந்​தி​யப் பழங்​குடி​யினர் கூட்​டுறவு சந்​தைப்​படுத்​தல் மேம்​பாட்​டுக் கூட்​டமைப்பு நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் ராஜா முரு​கன், சென்னை மண்டல பாஸ்​போர்ட் அலு​வலர் எஸ்​.​விஜயகு​மார் உள்பட பலர் பங்​கேற்​றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here