வாலிபாலில் சென்னை ஐசிஎஃப் அணி வெற்றி!

0
167

எஸ்என்ஜே குரூப் 71-வது மாநில அளவிலான ஆடவர், மகளிர் சீனியர் வாலிபால் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் பிரிவில் நடைபெற்ற ஆட்டங்களில் திருமயம் அண்ணா அணி 25-21, 25-15 என்ற கணக்கில் ஈரோடு கொங்கு கல்லூரியையும், சென்னை ஐசிஎஃப் 25-14, 25-20 என்ற கணக்கில் மயிலாடுதுறை செவன் ஸ்டார் அணியையும் வீழ்த்தின.

மகளிர் பிரிவில் நடைபெற்ற ஆட்டங்களில் எஸ்ஆர்எம் ஸ்பைக்கர்ஸ் 25-15, 25-12 என்ற கணக்கில் உண்ணாமலை ஸ்போர்ட்ஸ் கிளப்பையும், மினி ஸ்போர்ட்ஸ் அகாடமி 25-9, 25-8 என்ற கணக்கில் சூளை பிரண்ட்ஸ் அணியையும், எஸ்ஆர்எம் ஐஎஸ்டி 25-23, 25-22 என்ற கணக்கில் சிவந்தி கிளப் அணியையும் வீழ்த்தின.

முன்னதாக, இந்த தொடருக்கான கோப்பை அறிமுக விழா நடைபெற்றது. இதில் எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் மேகனாத ரெட்டி, நடிகர் பிரசாந்த், தமிழ்நாடு கால்பந்து சங்க தலைவர் அர்ஜூன் துரை, பொதுச் செயலாளர் மார்ட்டின் சுதாகர், நிர்வாகிகள் ஜெகதீசன், பழனியப்பன், கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here