கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த மருத்துவக் கல்லூரியில் உள்ள பல்வேறு வசதிகள் பற்றி ஆய்வு செய்வதற்காக அடுத்த மாதம் மத்திய குழு வருகை தர இருக்கிறது. இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்னர் பல்வேறு வசதிகள் கிடைக்கும் என்று மருத்துவ அதிகாரிகள் நேற்று (ஜூலை 22) தெரிவித்தனர்.