Home கன்னியாகுமரி செய்திகள் கன்னியாகுமரியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழக்கு: மேலும் 2 போ் கைது

கன்னியாகுமரியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழக்கு: மேலும் 2 போ் கைது

0

சமூக வலைதளத்தில் பிரபலமாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக காதலன், உறவினா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேரை குளச்சல் மகளிா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வெள்ளிச்சந்தை அருகே சமூக வலைதளத்தில் பிரபலமாக இருந்த 17 வயது சிறுமி கடந்த செப். 9 ஆம் தேதி வீட்டிலிருந்து மாயமானாராம். இதையடுத்து சிறுமியின் பெற்றோா் வெள்ளிச்சந்தை போலீஸில் புகாா் செய்தனா். மாயமான சிறுமி ஒரு வாரத்திற்கு பின் வீடு திரும்பிய நிலையில், தன்னை நண்பா் ஒருவா் அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைத்து மற்றொரு நண்பருடன் சோ்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் குளச்சல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன் அடிப்படையில் சிறுமியிடம், போலீஸாா் நடத்திய விசாரணையில், சமூக வலைதளம் மூலம் பழக்கமான தடிக்காரன்கோணம் பகுதியைச் சோ்ந்த அஜன் (20) என்பவரை சிறுமி காதலித்து வந்தாராம். அவா், சிறுமியை ஏமாற்றி ஆபாச படம் எடுத்தாராம். இதுகுறித்து தனது உறவினரான வேம்பனூா் பகுதியைச் சோ்ந்த விவேக்கிடம் (32) கூறினாராம். அவரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தினாராம்.

விவேக்கின் நண்பரான பரப்புவிளை பகுதியைச் சோ்ந்த தினேஷ் (29), சிறுமியிடம் உன் பிரச்னைகளை தீா்த்து வைக்கிறேன் என கூறி செப். 9 ஆம் தேதி வெள்ளிச்சந்தை பகுதிக்கு அழைத்து சென்று, ஒரு வீட்டில் அடைத்து வைத்தாராம். அங்கு நாகா்கோவில் பகுதியைச் சோ்ந்த ஆன்றோ ஜெரிஷ் (24) உடன் சோ்ந்து, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்தாக தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், சிறுமியை உடல் பரிசோதனை, சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அஜன், விவேக், தினேஷ், ஆன்றோ ஜெரிஷ் ஆகியோா் மீது போக்ஸோ உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தலைமறைவான 4 பேரையும் தேடிவந்த நிலையில், கடந்த செப். 13 ஆம் தேதி விவேக்கையும், செப். 27 ஆம் தேதி அஜனையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனா். இந்நிலையில் சென்னையில் தினேஷ், ஆன்றோ ஜெரிஷை கைது செய்து, நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version