Home மாநில செய்திகள் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் பணம் பறிக்கும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை கோரி வழக்கு

0

தமிழகம் முழு​வதும் உள்ள நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விவ​சா​யிகளிடம் பணம் பறிக்​கும் இடைத்​தரகர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி தொடரப்​பட்ட வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், இது தொடர்​பான புகாரை கூட்​டுறவுத்​துறை மற்​றும் லஞ்ச ஒழிப்​புத்​துறை இரு​வாரங்​களில் பரிசீலிக்க உத்​தர​விட்​டுள்​ளது.

காஞ்​சிபுரத்​தைச் சேர்ந்த ஏ. வெங்​கடேசன் என்​பவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது:

தமிழகம் முழு​வதும் உள்ள மாநில நுகர்​பொருள் வாணிபக் கழகத்​தின் நேரடி நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் தற்​போது டோக்​கன் நடை​முறை பின்​பற்​றப்​படு​கிறது.

இதனால், நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் இடைத்​தரகர்​கள் தலை​யிட்டு விவ​சா​யிகளிடம் லஞ்​சம் பெறும் நிலை உள்​ளது. நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் இடைத்​தரகர்​களின் தலை​யீட்டை தடுக்க வேண்​டிய அதி​காரி​களும் அவர்​களு​டன் கூட்​டணி அமைத்து செயல்​படு​வ​தால், சொந்​த​மாக நெல்லை விளைவிக்​கும் விவ​சா​யிகள் அதை அரசிடம் கொண்டு சேர்ப்​ப​தற்​குள் இடைத்​தரகர்​களிடம் சிக்கி மனதள​வில் பெரிதும் பாதிக்​கப்​படு​கின்​றனர்.

எனவே, நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விவ​சா​யிகளிடம் லஞ்​சம் பெறும் இடைத்​தரகர்​களின் தலை​யீட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்​கும், லஞ்ச ஒழிப்​புத்​துறைக்​கும் உத்​தர​விட வேண்​டும்.

அத்​துடன் நெல் கொள்​முதல் நிலை​யங்​களில் விவ​சா​யிகள் நேரடி​யாகவே பதிவு செய்து டோக்​கன் பெறும் நடவடிக்​கையை உரு​வாக்க உத்​தர​விட வேண்​டும். இடைத்​தரகர்​களின் நடமாட்​டத்தை கண்​காணிக்​கும் வகை​யில் கண்​காணிப்பு கேம​ராக்​களை பொருத்தி போதிய எண்​ணிக்​கை​யில் போலீஸ் பாது​காப்​பும் வழங்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில் அவர் கோரி​யிருந்​தார்.

இந்த மனு நீதிபதி எல்​.விக்​டோரியா கவுரி முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில், இதுதொடர்​பாக கடந்த ஆண்டு செப்​டம்​பரில் அதி​காரி​களிடம் புகார் அளித்​தும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என வாதிடப்​பட்​டது. காவல்​துறை தரப்​பில். தங்​களுக்கு இதுதொடர்​பாக எந்த புகாரும் வரவில்லை என தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்​து, இந்த விவ​காரம் தொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களிடம் புதி​தாக மனு அளிக்க மனு​தா​ரருக்கு உத்​தர​விட்ட நீதிப​தி, மனு​தா​ரர் தரப்பு கோரிக்​கை​யின் தீவிரத்தை கருத்​தில்​கொண்டு இதுதொடர்​பாக இரு​வாரங்​களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என கூட்​டுறவுத்​துறை செய​லா​ளர், தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழக தலை​வர் மற்​றும் நிர்​வாக இயக்​குநர், லஞ்ச ஒழிப்​புத்​துறை ஆகியோ​ருக்கு உத்​தர​விட்​டு வழக்​கை முடித்​து​வைத்​துள்​ளார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version