Home மாநில செய்திகள் உலகத் தமிழ் மாநாட்டை மீண்டும் நடத்த தமிழக அரசு திட்டம்: ஆலோசனைக்காக அமைச்சர் ராஜ்மோகன் அமெரிக்கா...

உலகத் தமிழ் மாநாட்டை மீண்டும் நடத்த தமிழக அரசு திட்டம்: ஆலோசனைக்காக அமைச்சர் ராஜ்மோகன் அமெரிக்கா பயணம்

0

தமிழக அரசின் சார்​பில் 15 ஆண்​டு​களுக்கு பிறகு உலகத் தமிழ் மாநாட்டை நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து ஆலோ​சனை நடத்த அமைச்​சர் ராஜ்மோகன் அமெரிக்கா​வுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார்.

மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் தலை​மை​யில் கடந்த 2010-ம் ஆண்டு கோவை​யில் உலகத் தமிழ் செம்​மொழி மாநாடு பிரம்​மாண்​ட​மாக நடத்​தப்​பட்​டது. இந்​நிலை​யில் 15 ஆண்​டு​களுக்​குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டை மீண்​டும் நடத்த தமிழக அரசு தற்​போது திட்​ட​மிட்​டுள்​ளது.

இதற்​கான முதற்​கட்ட பணி​கள் முதல்வரின் ஒப்​புதலுடன் தொடங்​கி​விட்​டன. மேலும் இந்த மாநாட்டை ஒரே இடத்​தில் மட்​டும் நடத்த கட்​டுப்​படுத்​தாமல், உலகெங்​கிலும் உள்ள தமிழ் அறிஞர்​கள், ஆய்​வாளர்​கள், கல்​வி​யாளர்​களை ஒன்​றிணைக்​கும் வகை​யில் அமெரிக்​கா, இங்​கிலாந்து போன்ற பல்​வேறு நாடு​களில் தொடர் அமர்​வு​களாக நடத்த திட்​ட​மிட்​டுள்​ள​தாக அரசு வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

உலகத் தமிழர்​களை இணைப்​பதே இந்த மாநாட்​டின் முக்​கிய நோக்​க​மாகக் கருதப்​படு​கிறது. உலகம் முழு​வதும் வாழும் தமிழர்​களின் மொழி, பண்​பாடு, இலக்​கி​யம், வரலாறு மற்​றும் கலாச்​சா​ரத்தை ஒரே மேடை​யில் இணைக்​கும் வகை​யில் இந்த மாநாடு நடை​பெறவுள்​ளது.

மாநாட்​டுக்​கான ஏற்​பாடு​கள் மற்​றும் செயல்​திட்​டங்​கள் குறித்து அரசு தீவிர​மாக திட்​ட​மிட்​டு​வரும் நிலை​யில், மாநாட்​டுக்​கான ஆயத்​தப் பணி​களின் ஒரு பகு​தி​யாக, உலகளா​விய தமிழ் அறிஞர்​களை​யும், கல்​வி​யாளர்​களை​யும், புலம்​பெயர்ந்த தமிழர்​களை​யும் சந்​தித்து அவர்​களின் கருத்​துகளை பெறு​வதற்​காக தமிழ் வளர்ச்​சித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் ஜூலை 1 முதல் 7-ம் தேதி வரை அமெரிக்கா​வுக்கு பயணம் மேற்​கொண்​டுள்​ளார்.

மாநாட்​டில் உலகளா​விய தமிழ் சமூகத்​தினரின் பரவலான பங்​களிப்பை உறு​தி​செய்​வதே அமைச்​சர் பயணத்​தின் நோக்​க​மாகப் பார்க்​கப்​படு​கிறது.

இந்த மாநாட்​டில் கல்​வி​சார் விவாதங்​கள் மட்​டுமின்​றி, செம்​மொழி தமிழ் குறித்த கருத்​தரங்​கு​கள், புலம்​பெயர்ந்த தமிழர்​களிடையே கலாச்​சா​ரப் பரி​மாற்​றம், அறி​வுப் பகிர்​வுக்​கான அமர்​வு​களும்​ இடம்​பெறவுள்​ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version