Home கன்னியாகுமரி செய்திகள் நாகர்கோவில் அருகே வரதட்சணை புகார் கணவன் மாமியார் மீது வழக்கு

நாகர்கோவில் அருகே வரதட்சணை புகார் கணவன் மாமியார் மீது வழக்கு

0
நாகர்கோவிலில் வரதட்சணைக் கொடுமை புகாரின் பேரில் கணவர் மற்றும் மாமியார் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம்
நாகர்கோவில் அருகே வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாகப் பெண் அளித்த புகாரின் பேரில், கணவர் மற்றும் மாமியார் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் அருகே மாதவலாயம் மைதீன்புரத்தைச் சேர்ந்த பாத்திமா ஷானியா (27), வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அளித்த புகாரின் பேரில், அவரது கணவர் நபீல் (31), மாமியார் நபீஷத் பீவி (54) ஆகியோர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பாத்திமா ஷானியாவுக்கும் நபீலுக்கும் கடந்த 2024 ஏப்ரல் 15ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 30 பவுன் தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை தனது பெற்றோர் வழங்கியதாகவும், அவை போதாது எனக் கூறி கணவரும் மாமியாரும் தன்னைக் கொடுமைப்படுத்தியதாகவும் பாத்திமா ஷானியா புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், கத்தாரில் கணவருடன் தங்கியிருந்தபோது தாக்குதல் மற்றும் விவாகரத்து மிரட்டலுக்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார். பின்னர் ஜமாத் பேச்சுவார்த்தையின்பேரில் மாதவலாயத்தில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், குடும்பச் செலவுக்குப் போதிய பணம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த அக்டோபர் 21ஆம் தேதி காலை, ஊர் திரும்பிய கணவரைப் பார்க்க மாமியார் வீட்டிற்குச் சென்றபோது, இருவரும் சேர்ந்து தன்னைத் தாக்கி வெளியேற்றியதாகவும், பின்னர் விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறி பதிவுத் தபால் அனுப்பி மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

இதன்பேரில், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் அக்டோபர் 27ஆம் தேதி, கணவர் நபீல் மற்றும் மாமியார் நபீஷத் பீவி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, அவதூறாகப் பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version