Home விளையாட்டு செய்திகள் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய ஜோடிக்கு வெண்கலம்

ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய ஜோடிக்கு வெண்கலம்

0

ஆசிய விளை​யாட்டு துப்​பாக்கி சுடு​தலில் ஸ்கீட் கலப்பு அணி​கள் பிரி​வில் இந்தியாவின் பரி​னாஸ் தலி​வால், அனந்த்​ஜீத் சிங் நருகா ஜோடி வெண்கலப் பதக்​கம் வென்று சாதனை படைத்​தது.

ஸ்கீட் கலப்பு அணி​கள் பிரிவு தகுதி சுற்​றில் இந்​தி​யா​வின் பரினாஸ் தலி​வால், அனந்த்​ஜீத் சிங் நருகா ஜோடி 138 புள்​ளி​களை குவித்து 4-வது இடம் பிடித்து இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்​றது. கத்​தார் 145 புள்​ளி​களு​டன் முதலிட​மும், தென் கொரியா (143) 2-வது இடமும், சீனா (140) 3-வது இடமும் பிடித்​தன.

இந்த 4 அணி​களும் இறு​திப் போட்​டி​யில் மோதின. தகு​திச்​சுற்​றில் ஆதிக்கம் செலுத்திய கத்​தார் அணி​யின் ராஷித் சாலி, ரீமாகானம் ஜோடி இறுதிப் போட்டியில் தலா 12 ஷாட்​களில் தடு​மாறிய​தால் வெளி​யேறினர். இந்த ஜோடி​யின் வெளி​யேற்​றம் இந்​தி​யா​வுக்கு குறைந்​த​பட்​சம் வெண்​கலப் பதக்​கத்தை உறு​தி​செய்​ததுடன், பதக்​கத்தை மேம்​படுத்​து​வதற்​கான வாய்ப்பை உரு​வாக்​கியது.

சீனா 23 இலக்​கு​களை​யும், தென் கொரியா 22 இலக்​கு​களை​யும், இந்​தியா 21 இலக்​கு​களை​யும் தாக்​கியது. தொடர்ந்து 2-வது சுற்​றில் இந்​தியா 23 இலக்​குளை தாக்​கியது. இதனால் இந்​திய ஜோடி​யின் சராசரி 44 ஆக உயர்ந்​தது. ஆனால் சீனா ஒட்​டுமொத்​த​மாக 52 இலக்​கு​களை​யும், தென் கொரியா 51 இலக்​கு​களை​யும் தாக்கி முறையே தங்​கம், வெள்​ளிப் பதக்​கம் வென்​றன.

இந்​தி​யா​வின் பரி​னாஸ் தலி​வால், அனந்த்​ஜீத் சிங் நருகா ஜோடி 44 இலக்​குளை தாக்கி 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் வென்​றது. ஆசிய விளை​யாட்​டில் ஸ்கீட் கலப்பு அணி​கள் பிரி​வில் இந்​தியா பதக்​கம் கைப்​பற்​று​வது இதுவே முதன்​முறை​யாகும். இந்​தியா நேற்று முன்​தினம் ஸ்கீட் அணி​கள் பிரி​வில் ஆடவர் மற்​றும் மகளிர் பிரிவில் வெண்​கலப்பதக்​கம் வென்​றிருந்​தது. இதில் மகளிர் பிரி​வில் பரி​னாஸ் தலி​வாலும்​ இடம்​ பெற்​றிருந்​தார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version