பள்ளி அங்கீகாரத்துக்கு லஞ்சம்: அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

0
23

தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகார அனுமதி பெற லஞ்சம் வாங்கப்பட்டதற்கு தாமே நேரடி சாட்சி என நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில் பேசியிருந்தார்.

இந்நிலையில், திமுக ஆட்சியில் லஞ்சம் கொடுத்ததாக அமைச்சர் மரிய வில்சன் பேசியது தொடர்பாக, அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் கே.சிவசுப்பிரமணியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், லஞ்சம் வாங்குவது மட்டுமல்லாமல், கொடுப்பதும் குற்றம் என்பதால், லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஆகஸ்ட் 26-ம் தேதி புகார் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தனது புகாரின் அடிப்படையில், அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ள மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here