Home உலக செய்திகள் வங்கதேசத்தில் கால்வாயில் மிதந்து வந்த டிரம்மில் இருந்து இந்து மதத்தை சேர்ந்தவரின் உடல் மீட்பு

வங்கதேசத்தில் கால்வாயில் மிதந்து வந்த டிரம்மில் இருந்து இந்து மதத்தை சேர்ந்தவரின் உடல் மீட்பு

0

வங்கதேசத்தில் கால்​வா​யில் மிதந்த டிரம்​மில் இருந்து இந்து மதத்​தைச் சேர்ந்​தரின் உடல் கண்​டெடுக்​கப்​பட்ட சம்​பவம் கடும் அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது.

நமது அண்டை நாடான வங்​கதேசத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்ட பிறகு, சிறு​பான்​மை​யின​ரான இந்​துக்​களுக்கு எதி​ரான தாக்​குதல் சம்​பவங்​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன. இந்த நிலையில், வங்​கதேசத்​தின் மைமன்​சிங் மாவட்​டம் பெகுன்​பாரி பகுதியில் உள்ள கால்​வா​யில், நீல நிற டிரம் ஒன்று மிதந்து வந்​தது.

இதைப் பார்த்த உள்​ளூர் மக்​கள் போலீ​ஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீ​ஸார் சம்பவ இடத்​துக்​குச் சென்று அந்த டிரம்மை மீட்டு சோதனை செய்​தனர்.

அப்​போது, அதில் ஒரு ஆண் சடலம் இருப்​ப​தைக் கண்டு போலீஸார் அதிர்ச்​சி​யடைந்​தனர். அவரது கால்​சட்​டை​யில், மைமன்​சிங் இந்து கூட்​டுறவு கடன் சங்​கத்​தால் வழங்​கப்​பட்ட டோக்​கன் ஒன்று இருந்​தது.

அதனை வைத்​து, இறந்​தவர் யார் என்​பதை போலீ​ஸார் அடை​யாளம் கண்​டனர். நகைக்​கடை உரிமையாளர். அதன்​படி, அவர் மைமன்​சிங் மாவட்​டத்​தின் அதர்பாரி பில்​டிங் பகு​தி​யைச் சேர்ந்த 50 வயதான நிரஞ்​சன் சந்திர சூத்​ர​தார் என்​பதும், அவர் நகைக்​கடை நடத்தி வந்​ததும் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, அவரது மனை​வி​யும், மகனும் அவரின் அடையாளத்தை உறுதி செய்​தனர். கூர்மையான ஆயுத காயம் நிரஞ்​சனின் தலை மற்​றும் மார்​பில் கூர்​மை​யான ஆயுதத்​தால் வெட்​டப்​பட்ட காயங்​கள் இருப்​ப​தால், அவர் கொலை செய்யப்பட்டு, உடலை டிரம்​மில் அடைத்து கால்​வா​யில் வீசியிருக்கலாம் என போலீ​ஸார் சந்​தேகிக்​கின்​றனர். இது தொடர்​பாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து தீவிர​மாக வி​சா​ரணை மேற்கொண்டு வரு​கின்​றனர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version