கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் நடைபெற்ற ஜீவா விழாவில் யூடியூபர் செந்தில் வேல் ஹிந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி பேசியதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைக் கண்டித்து, பூதப்பாண்டி காவல் நிலையத்தில் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்காததால், நேற்று குமரி மாவட்ட எஸ்.பியிடம் பாஜகவினர் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.