திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது

0
131

மத்​திய அமைச்​சர் அமித் ஷாவை விமர்​சித்த திமுக எம்​.பி. ஆ.ரா​சாவைக் கண்​டித்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடுபட முயன்ற பாஜக​வினர் கைது செய்​யப்​பட்​டனர். கடந்த மாதம் மதுரை வந்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, மகா​ராஷ்டி​ரா, டெல்​லியைப்போன்​று, தமிழகத்​தி​லும் ஆட்​சி​யமைப்​போம் என தெரி​வித்​திருந்​தார். இதை கடுமை​யான சொற்​களால் திமுக எம்​.பி. ஆ.ராசா விமர்​சித்​திருந்​தார்.

அதற்கு பாஜக​வினர் கடும் கண்​டனத்தை தெரி​வித்​ததோடு, ஆ.ரா​சாவைக் கண்​டித்து ஜூலை 1-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் அறி​வித்​திருந்​தார்.

அதே​நேரம், ஆர்ப்​பாட்​டத்​துக்கு காவல்​துறை அனு​ம​திக்​க​வில்​லை. இந்​நிலை​யில், சென்னை தண்​டை​யார்​பேட்​டை, கொளத்​தூர், அம்​பத்​தூர், அயனாவரம், சிவானந்தா சாலை, பனகல் மாளி​கை, திரு​வள்​ளுவர் நகர் ஆகிய இடங்​களில் ஆர்ப்​பாட்​டம் நடத்​து​வதற்​காக நேற்று மாலை பாஜக​வினர் திரளத் தொடங்​கினர்.

அப்​போது, கரு.​நாக​ராஜன், நாராயணன் திருப்​ப​தி, கராத்தே தியாக​ராஜன், வினோஜ் பி.செல்​வம், ஏ.என்​.எஸ்​.பிர​சாத் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​களை காவல்​துறை​யினர் கைது செய்​தனர். இதனால் இரு தரப்​பினருக்​கும் இடையே தள்​ளு​முள்​ளு, வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.

ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடுபட முயன்ற தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் கூறும்​போது, ‘‘போ​ராடக்​கூட அனு​ம​திக்​காமல் இருந்​தால், தமிழகத்​தில் ஜனநாயக முறை​யில்​தான் ஆட்சி நடக்​கிறதா என்ற கேள்வி எழுகிறது. மத்​திய அமைச்​சர் அமித் ஷாவை மிக மோச​மான வார்த்​தை​யில் திமுக எம்​.பி., ஆ.ராசா பேசுவதற்கு திமுக அரசு அனு​ம​திக்​கிறது. அரசு எவ்​வளவு அடக்​கு​முறையை கட்​ட​விழ்த்​தா​லும், எங்​களது போ​ராட்​டம் தொடரும்’’ என்​றார்.

இந்து மக்​கள் கட்​சித் தலை​வர் அர்​ஜுன் சம்​பத் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடுபட முயன்ற தமிழக பாஜக துணைத் தலை​வர் நாராயணன் திருப்​ப​தி, காவல்​துறை அதி​காரி​களால் கொடூர​மாக தாக்​கப்​பட்டு இருப்​பது அதிர்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது. இந்த விஷ​யத்​தில் முதல்​வர் நேரடி​யாக தலை​யிட்டு நீதியை நிலை​நாட்​டா​விட்​டால், இந்து மக்​கள் கட்​சி​யும்​ போ​ராட்​டக்​ களத்​தில்​ ஈடு​படும்​” என்​று கூறியுள்​ளார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here