உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் போப் ஆண்டவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாகர்கோவில் கோட்டார் ஆயர் இல்லத்தில் நேற்று ஆயர் நசரேன் சூசை மற்றும் பங்கு தந்தையர்கள் போப் ஆண்டவரின் புகைப்படத்திற்கு மலர்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.














