புதுடெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு சிறந்த ஃபீல்டர் விருது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெற்றது குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறும்போது, “இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் பயிற்சிக் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஃபீல்டிங்கில் என்னுடைய 100 சதவீத திறமையை வெளிக்கொண்டு வர முயற்சி செய்கிறேன்” என்றார். இந்தத் தொடரில் 3 விக்கெட்களை வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றியிருந்தார்.














