Home விளையாட்டு செய்திகள் பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தம்: B-கிரேடில் கோலியும், ரோஹித்தும் இடம்பிடிப்பு

பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்தம்: B-கிரேடில் கோலியும், ரோஹித்தும் இடம்பிடிப்பு

0

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் இந்திய கேப்டன்களான கோலியும், ரோஹித்தும் ‘கிரேடு-B’யில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தனர். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகின்றனர்.

ஆண்டுதோறும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் சார்ந்த விவரங்களை பிசிசிஐ புதுப்பிக்கும். அந்த வகையில் 2025 – 2026 சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் 30 வீரர்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்த முறை ‘கிரேடு-ஏ+’ நீக்கப்பட்டுள்ளது.

கிரேடு-ஏ: இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் அனுபவ ஆல்ரவுண்டர் ஜடேஜா இந்த பிரிவில் உள்ளனர்.

கிரேடு-பி: வாஷிங்டன் சுந்தர், ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் உள்ளனர்.

கிரேடு-சி: அக்சர் படேல், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், துருவ் ஜுரேல், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, சாய் சுதர்ஷன், ரவி பிஷ்னோய், ருதுராஜ் கெய்க்வாட்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version