புதுக்கடை காவல் நிலையம் மற்றும் விளாத்துறை ஊராட்சி பொதுமக்கள் இணைந்து போதை மற்றும் கஞ்சா , பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம் நேற்று (13-ம் தேதி) மாலை 6 மணிக்கு நடைபெற்றது. காப்புக் காட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜானகி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதில் குமரி முத்தமிழ் மன்ற தலைவர் முழங்குழி பா. லாசர், மற்றும் சொல்வேந்தர் பாபு, விளைத்துறை ஊராட்சி தலைவர் ஓமனா, ஒன்றிய கவுன்சிலர் சிவகாமினி , வார்டு உறுப்பினர் அனிதா உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவல் உதவி ஆய்வாளர் ( பணி நிறைவு ) விஜயராஜ் சிறப்பாக செய்தார்கள்.