கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் கோதையாற்றில் நீர்வரத்து அதிகரித்து, திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதித்துள்ளது. சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்லாமல் தடுக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
