Home கன்னியாகுமரி செய்திகள் பளுகல்: சட்ட விரோதமாக மது விற்ற மேலாளர் கைது

பளுகல்: சட்ட விரோதமாக மது விற்ற மேலாளர் கைது

0

களியக்காவிளை அருகே பளுகல் பகுதியில் தனியார் பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பாரில் சட்டவிரோதமாகவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக பளுகல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட பாருக்குச் சென்று நேற்று இரவு சோதனை நடத்தினர். 

அப்போது பாரில் சட்டவிரோதமாகவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்தும் மது விற்ற பார் மேலாளர் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரகு (50) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version