பளுகல்: பெண்களிடம் ரூ.13 லட்சம் மோசடி

0
175

களியக்காவிளை அருகே பளுகல் என்ற இடத்தை சேர்ந்தவர் மணியன் மனைவி ராணி (45). இந்த தம்பதிக்கு விபின் என்ற மகன் உள்ளார். ராணிக்கும் புரவலூர் பகுதியை சேர்ந்த சந்தியா (44) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்புடன் பழகிய நிலையில் ராணி சந்தியாவிடம் இருந்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ரூ. 6 லட்சத்து 71 ஆயிரம் ரொக்க பணத்தை கடனாக பெற்றுள்ளார். 

தற்போது இரண்டு வருடம் ஆகியும் சந்தியாவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர். இது குறித்து பணத்தை ராணி கேட்டபோது கணவர் மணியன் மற்றும் மகன் விபின் ஆகியோர் சேர்ந்து ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று பளுகல் பகுதி ஸ்ரீலதா (39) என்பவரிடமும் ராணி ரூபாய் 6 லட்சத்து 61 ஆயிரம் கடன் வாங்கி விட்டு திருப்பி கொடுக்கவில்லையாம். 

இது தொடர்பாக சந்தியாவும் ஸ்ரீலதாவும் சேர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பளுகல் போலீசார் ராணி, மணியன், விபின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here