ஆற்றூர்: 87 இளம் விஞ்ஞானிகளுக்கு விருது

0
225

ஜூன் மாதம் தொடங்கி ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற தலைப்பின்கீழ் சமூக அமைப்புகளை மேம்படுத்துதல், பொருளாதார உள்ளடக்கம், சுற்றுச்சூழல் சமநிலை, ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்தல், வளரும் தொழில்நுட்பங்கள் என்ற துணை தலைப்புகளில் திருவனந்தபுரம் என்.ஐ.ஐ.எஸ்.டி மத்திய ஆய்வு நிறுவனத்தில் ஆய்வுகளை சமர்ப்பித்தனர். 

அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஆற்றூர் என்.வி.கே.எஸ்.டி கல்வியல் கல்லூரியுடன் இணைந்து இன்று நடைபெற்றது. இந்திய விண்வெளித்துறை திரவ திட்ட மையத்தின் முன்னாள் இயக்குனரும் திரவ இயக்கத்தின் தந்தையுமான டாக்டர் ஏ.இ. முத்துநாயகம் விருது வழங்கினார். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் அறிமுகவுரையாற்றினார். மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஒ முன்னாள் இயக்குனர் கார்த்திகேசன், விண்வெளித்துறை முன்னாள் விஞ்ஞானி டாக்டர் சிவசுப்ரமணியம், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் டாக்டர் கே. விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய Breaking Boundaries in Education என்ற நூலை ஹாங்காங் பேராசிரியர் டாக்டர் மெய். சித்ரா நூலை வெளியிட முன்னாள் ஸ்ரீ இயக்குனர் கார்த்திகேசன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here