Home மாநில செய்திகள் தலைமைச் செயலக நுழைவு வாயிலில் மனு அளிப்பதற்காக முதல்வரின் வாகனத்தை மறிக்க முயற்சி: தள்ளு முள்ளுவில்...

தலைமைச் செயலக நுழைவு வாயிலில் மனு அளிப்பதற்காக முதல்வரின் வாகனத்தை மறிக்க முயற்சி: தள்ளு முள்ளுவில் இரு காவலர்கள் காயம்

0

 தலை​மைச் செயலக நுழைவு வாயில் அருகே முதல்வரின் வாக​னத்தை மறித்து மனு அளிக்க முயன்ற நபர்​களால் பரபரப்பு ஏற்​பட்​டது. இந்த நெரிசலில் சிக்கி பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த இரு காவலர்​கள் காயமடைந்​தனர்.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் துறை​வாரி மானியக் கோரிக்​கைகள் மீதான விவாதங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதையொட்டி முதல்​வர் விஜய் தனது நீலாங்​கரை இல்​லத்​திலிருந்து தலை​மைச் செயல​கம் நோக்கி நேற்று காலை சென்​றார்.

அப்​போது அவரது வரு​கைக்​காக நுழைவு வாயில் எதிரே நூற்​றுக்​கும் மேற்​பட்ட பொது​மக்​கள் காத்​திருந்​தனர். முதல்​வர் வாக​னம் நுழைவு வாயிலை நெருங்​கிய தருணத்​தில், அங்​கிருந்த சிலர் திடீரென பாது​காப்பு தடுப்​பு​களை மீறி வாக​னத்தை நோக்கி முன்​னேற முயன்​றனர்.

அங்​கிருந்த பாது​காப்​புப் போலீ​ஸார் அவர்​களை தடுத்து நிறுத்த முற்​பட்​ட​போது, கூட்​டத்​தில் இருந்த சிலர் போலீ​ஸாரை தள்​ளி​விட்டு முன்​னேறி சென்​றனர். இதனால் ஏற்​பட்ட தள்​ளு​ முள்​ளு​வில் காவலர் முத்து கணேஷ் கீழே விழுந்து காலில் பலத்த காயமடைந்​தார்.

கூட்ட நெரிசலை கட்​டுப்​படுத்​தும் பதற்​றத்​தில் மற்​றொரு காவலரின் கை பட்டு ராம்​கு​மார் என்ற காவலருக்கு நெஞ்​சுவலி ஏற்​பட்​டது. உடனடி​யாக அவர் தலைமை செயலக மருத்​து​வ​மனை​யில் சிகிச்​சைக்​காக அனு​ம​திக்​கப்​பட்​டார்.

இதையடுத்​து, பாது​காப்பு வளை​யத்தை மீறி உள்ளே நுழைய முயன்ற நபர்​களை கோட்டை போலீ​ஸார் காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்று விசா​ரணை நடத்​தினர்.

விசா​ரணை​யில், மானாமதுரை காவல் சரகத்​தில் கடந்த மார்ச் மாதம் காவலில் உயி​ரிழந்​த​தாக கூறப்​படும் ஆகாஷ் என்ற இளைஞரின் வழக்கை சிபிசிஐடி விசா​ரணைக்கு மாற்​றக்​கோரி, அவரது பெற்​றோர் ராஜேஷ் கண்​ணன், ஆனந்தி மற்​றும் தமிழ்​நாடு இளை​யோர் விடு​தலைக் கழகத்​தைச் சேர்ந்​தவர்​கள் மனு அளிக்க வந்​ததும், அப்​போது போலீ​ஸாரின் தடுப்​புக்​களை மீறி உள்ளே நுழைந்து முதல்​வர் கான்​வாயை வழிமறித்​ததும் தெரிய​வந்​தது. தலை​மைச் செயலக வாசலில் நடந்த இந்​த சம்​பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version