அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இவர், ‘நான்’, ‘அமர காவியம்’ போன்ற படங்களை இயக்கியவர்.
ரூபா மஞ்சரி, வாணி போஜன், முரளி சர்மா, ஆடுகளம் நரேன், அர்ஜாய் உள்பட பலர் நடித்துள்ளனர். ராது இன்ஃபோ டெயின்மென்ட் சார்பில் பெப்சி வி.எஸ்.பாலமுரளி தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி ஜீவா சங்கர் கூறும்போது, “ராமேஸ்வரம் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. சரா மற்றும் குட்டி என 2 கதாபாத்திரங்களைச் சுற்றி இப்படத்தின் கதை நகர்கிறது. அந்த 2 கதாபாத்திரங்களிலும் அதர்வா முரளி நடித்துள்ளார். மீனவர் சமூகத்தின் வாழ்க்கையை பேசும் இப்படம், பழிவாங்கும் கதையாக உருவாக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது” என்றார்.



