கிள்ளியூர் தொகுதி, அதங்கோடு பகுதியில் கோயிக்கதறை முதல் மடத்துவிளை வரை 4 வழி சாலையில் இருந்து இணைப்பு சாலை அமைக்க அப்பகுதி மக்கள் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். தேசிய நெடுஞ்சாலையை பொதுப்பணித் துறை அதிகாரிகள் அளவீடு செய்து, இணைப்பு சாலை அமைக்க அனுமதித்தனர். இந்த பணியினை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. நேற்று 29-ம் தேதி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.














