உதவி இயக்குநராக சேர அஸ்வத் மாரிமுத்துவுக்கு வந்த 15,000 மெயில்!

0
225

விஜய் சேதுபதி, அசோக் செல்வன் உட்பட பலர் நடித்த ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், அஸ்வத் மாரிமுத்து. இவர் அடுத்து இயக்கி இருந்த ‘டிராகன்’ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வர வேற்பைப் பெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாது லோகர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதையடுத்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

இதில் பணியாற்ற, உதவி இயக்குநர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் கேட்டிருந்தார். இதையடுத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதுபற்றி அஸ்வத் மாரிமுத்து வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் குழுவினர் உங்களின் விண்ணப்பங்களைப் பார்க்க இருக்கிறார்கள். முன்பு 10 உதவி இயக்குநர்களைத் தேர்வு செய்ய திட்டமிட்டேன். இப்போது எனது அடுத்த 2 படங்களுக்கும் சேர்த்து 20 பேரைத் தேர்வு செய்ய இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here