களியக்காவிளை அருகே உள்ள செங்கவிளை பகுதியை சேர்ந்தவர் கிங்சிலி ஆனந்த் (46). இவர் ராணுவ வீரர். அருமனை அருகே மேல்புறம் பகுதியில் இவருக்கு சொந்தமான இடத்தில் சந்தன மரம் உள்ளது. அதனை யாரோ திருட்டுத்தனமாக வெட்டி சென்றதாக கிங்சிலி ஆனந்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் அவர் பணியிடத்திலிருந்து கொண்டு அருமனை போலீஸ் நிலையத்திற்கு புகார் அனுப்பினார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் மேல்புறத்தை சேர்ந்த மகேஷ் (36) என்பவர் சந்தன மரத்தை திருடியது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி, அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து மகேசை அருமனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
            













