சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக அருண் குமார் நம்பூதிரி தேர்வு

0
235

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயில்மேல்சாந்தியாக (தலைமை அர்ச்சகர்) அருண் குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை 1-ம் தேதி மண்டல பூஜைகள் தொடங்கி நடைபெறும். இதற்கு முன்னதாக, ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகைப்புரம் மஞ்சமாதா கோயிலுக்கு மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) தேர்வு செய்யப்படுவது வழக்கம். மேல்சாந்தி பணிக்கு ஏராளமானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பலகட்ட தேர்வுக்கு பிறகு அதில் இருந்து ஐயப்பன் சன்னதிக்கு 24 பேரும், மாளிகைப்புரம் சன்னதிக்கு 15 பேரும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்கடந்த புதன்கிழமை திறக்கப்பட்ட நிலையில், சபரிமலைசன்னிதானத்தில் மேல்சாந்தியை தேர்வு செய்வதற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. கேரள உயர் நீதிமன்ற பார்வையாளர், திருவாங்கூர் தேவஸ்தான தலைவர், ஆணையர், உறுப்பினர்கள், பந்தளம் மன்னர் குடும்பத்தினர், கோயில் தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, கண்டரரு பிரம்மதத்தன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here