அருமனை: கிணற்று தண்ணீருடன் கலந்த பெட்ரோல்

0
185

அருமனை அருகே கேரளா எல்லை பகுதியான பனச்சமூடு, வெள்ளறடை பகுதிகளில் சுமார் 15 வீடுகள் உள்ளன. நேற்று அங்குள்ள கிணறிலிருந்து தண்ணீர் எடுத்தபோது வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் உடன் பெட்ரோலும் கலந்து வந்தது. மேலும் தண்ணீரில் பெட்ரோல் வாசனையும் வீசியது. சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அந்த தண்ணீரில் தீ வைத்த போது வாளியில் இருந்த தண்ணீர் தீப்பிடித்து எரிந்தது. 

இது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சென்று விசாரித்த போது பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் கசிவு ஏற்பட்டு குடிநீரில் கலந்திருப்பது உறுதியானது. இந்த பெட்ரோல் பங்க் தமிழக பகுதி புலியூர் சாலை பகுதியில் இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி கேரளா மாநிலம் வெள்ளறடை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியாக உள்ளதால், அருமனை போலீசார் பொதுமக்களிடம் வெள்ளறடை போலீசில் புகார் அளிக்க அறிவுரை வழங்கினார். இதை அடுத்து மக்கள் போலீசில் புகார் அளித்தனர். பெட்ரோல் பங்கில் இருந்ததுதான் பெட்ரோல் கசிவு ஏற்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here