அருமனை அடுத்த முழுக்கோடு பகுதி பஸ் நிறுத்தத்தில் மாணவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 பள்ளி மாணவர்கள் ஒரு மாணவனை ஆஸ்பெட்டாஸ் சீட் துண்டால் தலையில் வெட்டி படுகாயம் ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர். அருமனை போலீசார் காயமடைந்த மாணவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், உத்தரங்கோடு சந்திப்பில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.