மேல்புறம் வட்டவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுனில் மகன் சஞ்சீவ் (17). பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரிக்கு முதல் நாளாக நேற்று (ஜூன் 19) சென்றார். கல்லூரி முடிந்து வீடு திரும்பியவர், மாலையில் தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டுள்ளார்.
செம்மங்காலை பகுதியில் வைத்து நடந்து சென்றுகொண்டிருந்த பெண் மீது பைக் நிலைதடுமாறி மோதியதில் எதிரே வந்த பள்ளி வேன் மீது மோதியது. இதில் சஞ்சீவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார். அருமனை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.