திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் விபின் (21) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கப்பட்டு காதலித்த அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவி அபியா (20), கடந்த 27ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமானார். காதல் ஜோடி நேற்று அருமனை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து, திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவித்தனர். காதலனுடன் செல்ல அபியா உறுதியாகக் கூறியதால், போலீசார் அவரை அவருடன் அனுப்பி வைத்தனர்.