அருமனை பகுதியை சேர்ந்த பிபின் (29), ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வேலை செய்து வந்த நிலையில், முதல் மனைவி பிரிந்து சென்றார். சேலத்தை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்தப் பெண் பெற்றோருடன் சென்றதால் மனமுடைந்த பிபின், நேற்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














