அருமனை: சட்ட விரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டு வாலிபர்

0
231

அருமனை அருகே தனியாருக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை உள்ளது. இந்த முந்திரி ஆலையில் வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் எந்தவித அனுமதியும் இன்றி வந்துள்ளதாக குமரி மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட முந்திரி ஆலையில் சென்று விசாரணை நடத்தினர். இதில் மேற்கு வங்காள முகவரியுடன் 32 வயதான சித்திக் என்பவர் பணியில் இருந்தார். அவரது ஆதார் அட்டைகள் மற்றும் முகவரி சான்றுகளை பரிசோதனை செய்தனர். இதில் அந்தச் சான்றிதழ்கள் மீது போலீசருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. போலியானதாக அவை தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது மார்த்தாண்டம் டிஎஸ்பி நல்லசிவன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here