செயற்கை நுண்​ணறிவு உச்சி மாநாடு: இந்தியாவுக்கு ஐ.நா. தலைவர் பாராட்டு

0
13

டெல்​லி​யில் வரும் 19, 20 ஆகிய தேதி​களில் செயற்கை நுண்​ணறிவு தொடர்​பான உச்சி மாநாட்டை இந்​தியா நடத்​தவுள்​ளது. இதில் பல்​வேறு நாடு​களின் தலைவர்​கள், பிர​தி​நி​தி​கள் கலந்​து​கொள்​ளவுள்ளனர். இந்த உச்சி மாநாட்​டுக்கு வரு​வதை ஐ.நா. சபை தலை​வர் அன்டோனியா குட்​டேரஸும் உறுதி செய்​துள்​ளார்.

இதுகுறித்து செய்தி நிறு​வனத்​துக்கு நேற்று அவர் அளித்த பேட்​டி: செயற்கை நுண்​ணறி​வுத்​துறை என்​பது மிக​வும் வேக​மாக வளர்ந்து வரும் ஒரு துறை​யாகப் பார்க்​கப்​படு​கிறது. இதனால் பல நன்​மை​களும், தீமை​களும் உண்​டு. சர்​வ​தேச உறவு​களில் இன்று செயற்கை நுண்​ணறிவு முக்கிய​மான விஷய​மாக​வும், பிரச்​சினை​யாக​வும், எதிர்கால சவால்​களில் ஒன்​றாக​வும் உள்​ளது.

இந்​தத் துறை​யால் பல நிபுணர்​கள் வேலை​யிழக்​கும் அபாயம் உள்​ள​தாக கருதுகின்​றனர். எனவே, இதுதொடர்​பாக அனைத்து வகை​யான சூழ்​நிலைகளி​லும் உலக நாடுகள் ஒன்​றிணைந்து அதைப் பற்றி விவா​திப்​பது மிகவும் முக்​கி​யம்.

இந்த உச்​சி​மா​நாட்​டில் தலை​மைப் பொறுப்பை ஏற்​றுக்​கொண்​டதற்​காக இந்​தி​யாவை நான் பாராட்​டு​கிறேன். இந்த உச்சி மாநாட்​டில் செயற்கை நுண்​ணறிவு தொடர்பாக எழுந்​துள்ள சவால்​கள் குறித்து விரி​வாக விவாதிக்​கப்பட வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here