Home மாநில செய்திகள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 6 மாதங்களுக்குள் அறங்காவலர்கள் நியமனம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் 6 மாதங்களுக்குள் அறங்காவலர்கள் நியமனம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

0

சென்னை திரு​வல்​லிக்​கேணி பார்த்தசாரதி கோயி​லில் 47 ஆண்​டு​களாக கோயில் செயல் அலு​வலரே தக்​கா​ராக நியமிக்​கப்​பட்டு வரு​வ​தால், அரசு அதி​காரி​யாக உள்ள செயல் அலு​வலரை தக்​கா​ராக நியமிக்க கோரி, டி.ஆர்​.ரமேஷ் என்​பவர் சென்னை உயர்​நீ​தி​மன்​றத்​தில் வழக்கு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்​த​போது, செயல் அலு​வலர்​கள் கோயி​லின் மத நடவடிக்​கை​களில் ஈடு​படு​வ​தாக மனு​தா​ரர் தரப்​பில் குற்​றம்​சாட்​டப்​பட்​டது.

மத நடவடிக்​கை​களில் தலை​யிட செயல் அலு​வலர்​களுக்கு என்ன உரிமை உள்​ளது? அறங்காவலர்கள் எப்​போது நியமிக்​கப்​படு​வார்​கள் என நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பினர்.

இதற்கு பதிலளித்த கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் பி.​வி.​பாலசுப்​ரமணி​யம், அறங்​காவலர் பதவிக்கு விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​பட்​டுள்​ளன. நியமன நடை​முறை​களை முடிக்க 6 மாதங்​கள் ஆகும் என தெரி​வித்​தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிப​தி​கள், 6 மாதங்​களுக்​குள் அறங்​காவலர் நியமன நடை​முறை​களை முடிக்கும்​படி உத்​தர​விட்டனர்.

மேலும், கோயில் செயல் அலு​வலர்​கள் மத நடவடிக்​கை​களில் தலை​யிடக் கூடாது என்​றும், கோயி​லின் மரபு, பழக்க வழக்​கங்​கள் தெரிந்​தவர்​கள் மட்​டுமே அத்தகைய பணிகளை மேற்​கொள்ள வேண்​டும் என உத்​தர​விட்டு வழக்​கை முடித்​து​வைத்​தனர்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version