Home மாநில செய்திகள் எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் உறுதி

எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் உறுதி

0

அனல் மின் நிலைய பாதிப்​பு​கள் குறித்து மீனவர்​களு​டன் அமைச்​சர் நிர்​மல்​கு​மார் கலந்​தாய்வு கூட்​டம் நடத்​தி​னார். இந்த கூட்​டத்​தில் எண்ணூர் பகுதி மீனவர்​களின் வாழ்​வா​தா​ரத்​துக்கு தேவை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும் என அமைச்​சர் உறு​தி​யளித்​தார்.

சென்னை மின்​வாரிய தலைமை அலு​வல​கத்​தில் நேற்று மின்​சா​ரத் துறை அமைச்​சர் சி.டி.ஆர். நிர்​மல் குமார் எண்​ணூரை சுற்​றி​யுள்ள நெட்​டுக்​குப்​பம், தாழங்​குப்​பம் உள்​ளிட்ட 8 கிராம மீனவர்​களின் நீண்​ட​கால கோரிக்​கைகள் குறித்து மீனவ சங்க பிர​தி​நி​தி​களு​டன் கலந்​தாய்வு கூட்​டம் மேற்​கொண்​டார்.

இந்த கூட்​டத்​தில் மீனவர்​களின் வாழ்​வா​தா​ரம், சுற்​றுச்​சூழல் பாது​காப்​பு, வேலை​வாய்ப்​பு, மாசுகட்​டுப்​பாடு மற்​றும் பொதுநலக் கோரிக்​கைகள் குறித்து கேட்​டறிந்​தார்.

தொடர்ந்து கூட்​டத்​தில் பேசிய அமைச்​சர் நிர்​மல்​கு​மார் கூறிய​தாவது: வேலை​வாய்ப்பு தொடர்​பாக, அரசால் நடை​முறை​யில் செயல்​படுத்​தக்​கூடிய, அனை​வருக்​கும் சமநீ​தியை வழங்​கக் கூடிய ஒரு நிரந்தர நடை​முறை உரு​வாக்​கப்​படும்.

இதற்​காக, எட்டு மீனவ கிராமங்​களின் பதிவு செய்​யப்​பட்ட மீனவர்​கள் மற்​றும் மீனவ குடும்​பங்​களின் விவரங்​கள், உண்​மை​யாக மீன்​பிடித் தொழிலை நம்பி வாழும் குடும்​பங்​கள், பொருளா​தார ரீதி​யாக மிக​வும் பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​கள் ஆகிய​வற்றை அடிப்​படை​யாகக் கொண்​டு, அதி​காரி​களு​டன் விரி​வாக ஆய்வு செய்து ஒரு செயல்​பாட்டு வழி​முறையை உரு​வாக்க நடவடிக்கை எடுக்​கப்​படும்.

மேலும் மின்​சார வாரி​யத்​தில் ஏற்​க​னவே நீண்ட கால​மாக பணிபுரி​யும் ஒப்​பந்​தத் தொழிலா​ளர்​கள் உள்​ளிட்ட பல்​வேறு தரப்​பினரின் உரிமை​களை​யும் கருத்​தில் கொள்ள வேண்​டிய பொறுப்பு அரசுக்கு உள்​ளது.

அனை​வருக்​கும் நியாய​மான மற்​றும் சட்​டபூர்​வ​மான தீர்வு காணும் வகை​யில் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும்.

சுற்​றுச்​சூழல், சாம்​பல் அகற்​று​தல், நீர்​வழிப் பாதைகள், ஆற்​றுப் பராமரிப்​பு, ஒப்​பந்​தப் பணிகள் உள்​ளிட்ட அனைத்து கோரிக்​கைகளும் தனித்​தனி​யாக பட்​டியலிடப்​பட்​டு, சம்​பந்​தப்பட்ட துறை அதி​காரி​களின் மூலம் ஆய்வு செய்​து, உடனடி​யாக மேற் கொள்​ளக் கூடிய பணிகள் விரைவு படுத்​தப்​படும்.

எண்​ணூர் பகுதி மீனவர்​களின் நலன், வாழ்​வா​தா​ரத்துக்கு தேவை​யான நடவடிக்​கைகளை​ தமிழக அரசு தொடர்ந்து மேற்​கொள்​ளும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version