தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி, குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும், முறையான ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், பணிக்கொடையாக ரூ. 10 லட்சம் மற்றும் ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் மாவட்ட தலைவர் சாந்தா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சி. ஐ. டி. யூ. மாவட்ட செயலாளர் ஸ்டாலின்தாஸ் தொடக்க உரையாற்றினார். மாநில செயலாளர் சரஸ்வதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.