ஆய்வகத்தில் உருவான இதயம், கல்லீரல்: அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

0
10

அமெரிக்​கா​வின் நார்த் டெக்​சாஸ் பல்​கலைக்​கழகம், ஸ்டான்​போர்டு பல்​கலைக்​கழக விஞ்​ஞானிகள் இணைந்து இதயம், கல்​லீரல், ரத்த நாளங்​கள் உள்​ளிட்ட மனித உறுப்​பு​களை ஆய்​வகத்​தில் செயற்கையாக உரு​வாக்கி சாதனை படைத்து உள்​ளனர்.

இதுதொடர்​பான ஆய்​வறிக்கை முன்​னணி மருத்​துவ இதழ்​களில் வெளி​யிடப்​பட்டு உள்​ளது. அந்த ஆய்​வறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ஆய்​வகத்​தில் ஸ்டெம் செல்​களை பயன்​படுத்தி செயற்கை இதயத்தை உரு​வாக்​கும் ஆராய்ச்​சி​யில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஈடு​பட்டு வரு​கிறோம். இதன்​படி 16 நாட்​களில் எங்​களது ஆய்​வகத்​தில் செயற்கை இதயம் உரு​வாக்​கப்​பட்​டது. இந்த செயற்கை இதயம்,மனித இதயத்தை போன்று துடிக்​கிறது.

இதே​போல செயற்கை கல்​லீரலை​யும் உரு​வாக்கி உள்​ளோம். மேலும் செயற்கை ரத்த நாளங்​களை​யும் உரு​வாக்கி இருக்​கிறோம். எங்​களது ஆராய்ச்​சி​யின் மூலம் லட்​சக்​கணக்​கான மக்​களை காப்​பாற்ற முடி​யும். இவ்​வாறு ஆய்​வறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here