அனைத்து உரிமைகளும் விற்பனை: ‘யூத்’ படக்குழுவினர் குஷி

0
181

‘யூத்’ படத்தின் அனைத்து உரிமைகளும் விற்கப்பட்டு விட்டதால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

கென் கருணாஸ் இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் படம் ‘யூத்’. இப்படத்தின் இசை, ஓடிடி, தொலைக்காட்சி, தமிழக திரையரங்கம் என அனைத்து உரிமைகளுமே விற்கப்பட்டு விட்டது. இதனால் படக்குழுவினருக்கு இப்போதே நல்ல லாபம் கிடைத்துள்ளது. விரைவில் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் பிரம்மாண்டமாக தொடங்கவுள்ளது.

’சிறை’ நாயகி அனிஷ்மா, தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சுரமுடு, ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் கென் கருணாஸ் உடன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தினை பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பல்வேறு பெரிய நாயகர்களின் படங்களே ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமங்கள் விற்க கஷ்டப்படும் போது, இப்படத்தினைப் பார்த்தவுடனேயே அனைத்து உரிமைகளும் விற்கப்பட்டுவிட்டது. இதனால் கென் கருணாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருமே பெரும் உற்சாகமாகி இருக்கிறார்கள்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here