குமரி மாவட்ட அதிரடிப் படையில் டிரைவராகவும், ஆயுதப்படை முதல் நிலை காவலராகவும் பணியாற்றி வரும் அருள்ராஜ் (36), கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலஞ்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த வாலிபர்கள் அவரை கீழே தள்ளி காயப்படுத்தி, அரசு பணி செய்யவிடாமல் கெட்ட வார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து கருங்கல் போலீசார், கண்டால் தெரியும் வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.












