ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘அண்டர் 18’

0
29

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘அண்டர் 18’ பட அறிவிப்பை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த், கிஷோர் நடிக்கும் புதிய படத்துக்கு ‘அண்டர் 18’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய  கார்த்திக் பெருமாள்சாமி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பை வெற்றிமாறன் வெளியிட்டார்.

க்ரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஓசுர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.  இளங்கோ கிருஷ்ணன், கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதுகின்றனர். இப்படத்தை எஸ்ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜெகதீஸ் தயாரிக்க உள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here