இந்தியா வந்திருக்கும் ஜெர்மனி அதிபர் பிரட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக அகமதாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஜெர்மனி அதிபர் பிரட்ரிக் மெர்ஸ், 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் வந்திறங்கிய அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
பிரட்ரிக்கின் முதல் இந்திய பயணம் இது. குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் மோடியும் அதிபர் பிரட்ரிக்கும் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம், முதலீடு, சிக்கலான தொழில்நுட்பப் பரிமாற்றம், பாதுகாப்புத் துறை போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து தலைவர்கள் இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் உடனிருந்தனர். இந்தக் கூட்டம் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் வளாகத்தில் நடைபெற்றது.
ஆசிரமத்திற்கு வந்த பிறகு, இரு தலைவர்களும் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு மலரஞ்சலி செலுத்தினர். மெர்ஸ் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.
பட்டம் விடும் விழா: மகர சங்கராந்தியை முன்னிட்டு சபரிமதி ஆற்றங்கரையில் மூன்று நாள்கள் நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் விழா இன்று காலை தொடங்கியது. இந்தவிழாவை பிரதமர் மோடியும், ஜெர்மனி பிரதமர் பிரட்ரிக் மெர்ஸும் இணைந்து பட்டம்விட்டு தொடங்கி வைத்தனர்.
அக்கொடியில், இரு நாட்டு கொடிகள், தலைவர்களின் படங்கள் மற்றும் இந்து கடவுள்களின் கொடிகள் அச்சிடப்பட்டிருந்தன.



