அதிபர் தேர்தலுக்கு பிறகு அமெரிக்காவில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்

0
203

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளதற்குப் பிறகு தலைநகர் வாஷிங்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது. அதிபர் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற மிக முக்கியமான மாபெரும் பண்டிகை கொண்டாட்டம் இதுவாகும்.

இந்து அமெரிக்க அறக்கட்டளை, அமெரிக்க சீக்கிய அமைப்புகள், வட அமெரிக்காவின் ஜெயின் அசோசியேஷன், வாழும் கலை உள்ளிட்ட பல இந்திய அமெரிக்க அமைப்புகளுடன் இணைந்து ஸ்ரீ சுவாமிநாராயண் கோயில் இந்த தீபாவளி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதில், 24-க்கும் மேற்பட்ட அமெரிக்க எம்பிக்கள் மற்றும் செல்வாக்குமிக்க இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.

தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட செனட்டர் ராண்ட்பால் கூறுகையில், “ அமெரிக்கா புலம்பெயர்ந்தோர் நாடு. இது, உலகெங்கிலும் உள்ள சிறந்த மற்றும் பிரகாசமானவர்களை ஈர்க்கிறது. அமெரிக்காவை ஒரு சிறந்த நாடாக மாற்றவே அவர்கள் ஒன்றிணைகிறார்கள். சட்டபூர்வ குடியேற்றத்துக்காக ஒரு வழக்கறிஞராக தொடர்ந்து பாடுபடுவேன். அனைவருக்கும் நல்ல தீபாவளி திருநாளாக அமையட்டும்” என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here