Home மாநில செய்திகள் திமுக மறுசீரமைப்புக்கு ஆலோசனை குழு அமைப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திமுக மறுசீரமைப்புக்கு ஆலோசனை குழு அமைப்பு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0

தி​முக​வின் கிளைக் கழகம் முதல் தலை​மைக் கழகம் வரை ஒரே சீரான மறுசீரமைப்பு மற்​றும் மறுகட்​டமைப்பு பணி​களை மேற்​கொள்​வதற்​காக 10 பேர் கொண்ட ஆலோ​சனைக் குழுவை அக்​கட்​சி​யின் தலை​வர் மு.க.ஸ்டா​லின் அமைத்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த சட்​டப்​பேரவை தேர்​தல் முடிவு வெளி​யான உடனேயே கட்​சித் தொண்​டர்​களின் கருத்​துகளை கேட்க முடிவு செய்​து, அதற்​காக 19 குழுக்​கள் அமைக்​கப்​பட்​டன. இந்த ஆய்​வுக்​குழு​வில் 38 பேர் இடம்​பெற்​றிருந்​தனர். தமிழகம் முழு​வதும் பயணித்த இவர்​கள், ஆராய்ந்து அறிக்​கைகளை தயாரித்து என்​னிடம் வழங்​கி​யுள்​ளனர்.

இவர்​கள் அனை​வருமே திமுக​வின் மறுசீரமைப்​பையே வலி​யுறுத்​தி​யுள்​ளனர். அதனடிப்​படை​யில் கட்​சிக்கு புத்​துணர்ச்சி அளிக்​கும் வகை​யில் மறுசீரமைப்​புக்கு புதிய ஆலோ​சனை குழு அமைக்​கப்​படு​கிறது. இதில் முன்​னாள் அமைச்​சர்​கள் தங்​கம் தென்​னரசு, கீதா ஜீவன், அர.சக்​கர​பாணி, எஸ்​.எஸ்​.சிவசங்​கர், எம்​.பி.க்​கள் எம்​.எம்​.அப்​துல்​லா, ச.முரசொலி, முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் தமிழரசி ரவிக்​கு​மார், இ.பரந்​தாமன், எழிலன் மற்​றும் எஸ்​.கே.பி.கருணா ஆகியோர் இடம்​பெற்​றுள்​ளனர்.

இந்த குழு​வானது மாவட்​டங்​களில் மேற்​கொள்ள வேண்​டிய மறு​வரையறை, சார்பு அணி​களின் மறுசீரமைப்பு மற்​றும் தேர்​தல் பணிக்​குழு உள்​ளிட்ட பல்​வேறு குழுக்​களில் செய்ய வேண்​டிய மாற்​றங்​கள் குறித்து விரி​வாக ஆரா​யும். மேலும், தேர்​தல் பணி​களை தொய்​வின்றி செய்​வதற்​கான நிரந்தர அமைப்பு மற்​றும் தலை​மைக்​கான ஆலோ​சனை​களை வழங்​கும் ஒரு அமைப்பை உரு​வாக்​கு​வது குறித்​தும் தனது பரிந்​துரைகளை ஆகஸ்ட் மாதத்​தின் முதல் வாரத்​தில் என்​னிடம் வழங்​கும். அதன்​பின், தி​முக​வின் மறுசீரமைப்பு மேற்​கொள்​ளப்​படும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டு உள்​ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version