நாகர்கோவில் பார்வதிபுரம் அரசு பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 44 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் நேற்று தொடங்கின. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி இந்த பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மேரி ஹெலன் பிரேமா முன்னிலையில், மாமன்ற உறுப்பினர்கள் ரோஷிடா திருமால், வீர சூர பெருமாள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த புதிய வகுப்பறைகள் மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.