Home தேசிய செய்திகள் டெல்லி போராட்டத்தை ஒடுக்குவதில் ஏடிசிபி ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் சமூக வலைதளங்களில் வைரல்

டெல்லி போராட்டத்தை ஒடுக்குவதில் ஏடிசிபி ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் சமூக வலைதளங்களில் வைரல்

0

ஜந்​தர் மந்​தரின் போராட்​டத்​தின்போது டெல்லி காவல் துறை​யின் கூடு​தல் துணை ஆணை​ய​ரான (ஏடிசிபி) ஐஸ்வர்யா சிங் நடவடிக்​கைகள் பாராட்​டு​களைப் பெற்று வருகிறது. இதுதொடர்​பான வீடியோக்​கள் வைரலாகி உள்​ளன.

மத்​திய தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரை எதிர்த்து கரப்பான் பூச்சி ஜனதா கட்​சி, அகில இந்​திய மாணவர் சங்​கம் உள்ளிட்ட அமைப்​பு​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்​றன. போராட்டக்காரர்​கள் மீது டெல்லி காவல்​துறை​யின் ஒரு பெண் அதி​காரி எடுக்​கும் நடவடிக்​கை​யும் தற்​போது வைரலாகி உள்​ளது. அந்த பெண் அதி​காரி, டெல்லி காவல் துறை​யின் தெற்​குப் பகுதி ஏடிசிபி ஐஸ்​வர்யா சிங். இவரது அதிரடி நடவடிக்கை தற்​போது சமூகவலை தளங்​களில் வைரலாகி உள்​ளன.

ஏடிசிபி​யான ஐஸ்​வர்​யா, காவலர்​களைப் போல் களத்​தில் இறங்கிதன் கடமையை ஆற்​று​வது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. அவரது துணிச்​சலான செயல்​பாடு​கள் அடங்​கிய காணொளி​கள் வைரலாகி வரு​கின்​றன. அவற்​றில், போராட்​டக்​காரர்​களைப் பிடித்து பேருந்​துகளில் ஏற்​று​வது, போலீஸ் பிடியிலிருந்து தப்​பியோடிய போராட்​டக்​காரரைப் பிடிப்​பது, காயமடைந்த ஒரு​வருக்கு உதவுவது போன்ற காட்​சிகள் இடம்​பெற்​றுள்ளன.

இதைக் காண்​பவர்​கள் ஏடிசிபி ஐஸ்​வர்​யாவை பாராட்டி வருகின்றனர். உத்​தரப்​பிரதேசம் அலிகர் நகரைச் சேர்ந்த ஐஸ்வர்யா சிங், கடந்த 2022-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்​வில் அகில இந்​திய அளவில் 97-வது இடத்​தைப் பிடித்து தேர்ச்சி பெற்​றார். இவரது தந்தை ஞானேந்​திர பிர​தாப் சிங், அசாம்​-மே​காலயா பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதி​காரி.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version