நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

0
21

தமிழில், மனுநீ​தி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்பட சில படங்களில் நடித்​தவர் தெலுங்கு நடிகை பிரதியுஷா. இவர், சித்​தார்த்தா ரெட்டி என்​பவரைக் காதலித்து வந்​தார். கடந்த 2002-ம் ஆண்டு பிப்​.23-ம் தேதி இரு​வரும் விஷம் குடித்த நிலை​யில் மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்டனர்.

மறு​நாள் பிர​தி​யுஷா மரணமடைந்​தார். சித்​தார்த்தா ரெட்டி உயிர் பிழைத்​தார். அவர்​கள் அருந்​திய குளிர்​பானத்​தில் பூச்​சிக்​கொல்லி கலந்​திருந்​தது தெரிய​வந்​தது. இச்சம்பவம் அப்​போது பரபரப்​பாகப் பேசப்​பட்​டது.

பிர​தி​யுஷா​வின் தாய் சரோஜினி தேவி, இது வெறும் தற்கொலை அல்ல; கூட்​டுப் பாலியல் வன்​கொடுமை என்றும் அரசி​யல் செல்​வாக்கு உள்​ளவர்​கள் இதற்​குப் பின்னால் இருப்​ப​தாக​வும் குற்​றம் சாட்​டி​யிருந்​தார். இந்​தச் சம்​பவத்​தில் பிர​தி​யுஷாவை தற்​கொலைக்​குத் தூண்டியதாக சித்​தார்த் ரெட்டி மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். இவ்​வழக்கை விசா​ரித்த சிபிஐ, சித்தார்த்தா ரெட்டி மீது குற்​றப் பத்​திரிகை தாக்​கல் செய்தது.

அதனடிப்​படை​யில், கடந்த 2004-ம் ஆண்​டில் சித்​தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டு சிறைத் தண்​டனையை ஹைத​ரா​பாத் முதன்மை அமர்வு நீதி​மன்​றம் விதித்​தது. இத்தண்டனையை, 2011-ம் ஆண்டு உயர்​நீ​தி​மன்​றம் 2 ஆண்​டு​களாகக் குறைத்​ததுடன் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்​தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சித்​தார்த் ரெட்​டி​யும் பிரதியுஷாவின் தாயார் சரோஜினி தேவி​யும் 2012-ம் ஆண்டு உச்ச நீதி​மன்​றத்தை அணுகினர். 14 ஆண்டு விசாரணைக்​குப் பிறகு உயர் நீதி​மன்​றத் தீர்ப்​பை, உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​துள்​ளது.

அதன்​படி சித்​தார்த் ரெட்டி 4 வாரங்​களுக்​குள் சரணடைய வேண்​டும் என்​றும், தீர்ப்​பில் குறிப்​பிட்​டுள்ள அபராதத்தைச் செலுத்த வேண்​டும் எனவும் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ராஜேஷ் பிண்​டால் மற்​றும் மன்​மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு தீர்​ப்​பளித்​துள்​ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here