Home மாநில செய்திகள் வாகன ஓட்​டிகளிடம் லஞ்​சம் வாங்கிய 6 போக்குவரத்து போலீஸார் மீது நடவடிக்கை

வாகன ஓட்​டிகளிடம் லஞ்​சம் வாங்கிய 6 போக்குவரத்து போலீஸார் மீது நடவடிக்கை

0

தைவான் நாட்டு சுற்​றுலாப் பயணி உட்பட வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதிக்​காமல் இருக்க லஞ்​சம் பெற்ற போக்கு​வரத்து போலீ​ஸார் 6 பேர் மீது காவல் ஆணை​யர் நடவடிக்கை எடுத்​துள்​ளார்.

தைவான் நாட்​டைச் சேர்ந்த சுற்​றுலாப் பயணி ஒரு​வர் அண்ணாநகர் பகு​தி​யில் மது​போதை​யில் வாக​னம் ஓட்டி வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்​திய, போக்​கு​வரத்து காவலர் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்​காமல் இருக்க ரூ.3,500 லஞ்​சம் பெற்​றுள்​ளார். இதை அறிந்த காவல் ஆணை​யர் அமல்​ராஜ், அந்த காவலரை பணி​யிடை நீக்​கம் செய்​துள்​ளார்.

இதே​போல், வாகன ஓட்​டிகளிடம் லஞ்​சம் பெற்ற நுங்​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்த போக்​கு​வரத்து போலீ​ஸார் 4 பேர், மாம்​பலத்​தைச் சேர்ந்த ஒரு​வர் என சென்​னை​யில் மொத்​தம் 6 போக்​கு​வரத்து காவல்​துறை​யினர் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இவர்​களில் பெண் காவல் ஆய்​வாள​ரும் ஒரு​வர். இவர்​கள் மீது பணி​யிடை நீக்​கம், காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு மாற்​றம், ஆயுதப்​படைக்கு மாற்​றம் போன்ற நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளன.

அபராதம் விதிக்க தடை

சென்​னை​யில் மடிப்​பாக்​கம், நீலாங்​கரை, துரைப்​பாக்​கம், மீனம்​பாக்​கம், மதுர​வாயல் உள்பட 8 போக்​கு​வரத்து காவல் நிலை​யங்​களில் போக்​கு​வரத்து போலீ​ஸார் அபராதம் விதிக்க காவல் ஆணை​யர் தடை உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார். சென்​னை, தாம்​பரம், ஆவடி என காவல் ஆணை​யரங்​கள் பிரிக்​கப்​பட்​ட​போது ஒருங்​கிணைப்​ப​தில் நிர்​வாக சிக்​கல் எழுந்​தது.

இங்கு வாகன ஓட்​டிகள் ஆன்​லைன் வாயி​லாக அபராதம் செலுத்​து​வ​தில் சிக்​கல் நீடித்​த​தால் இந்த தற்​காலிகத் தடை உத்​தரவை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் பிறப்​பித்​துள்​ள​தாக தகவல் வெளியாகி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version