கன்னியாகுமரி மாவட்டத்தில், குறிப்பாக குளச்சல், திக்கணங்கோடு, கருங்கல், மார்த்தாண்டம், தக்கலை, பார்வதிபுரம் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதமும், காயங்களும் ஏற்படுவதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) குளச்சல் நகர செயலாளர் ரிபாய் கான் தெரிவித்துள்ளார். குண்டும் குழியுமான குறுகிய சாலைகளில் டாரஸ் லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும், கனிம வள கடத்தல் லாரிகள் சிட்டாகப் பறப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த வாகனங்களைக் கட்டுப்படுத்தி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என தமுமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.