மேல்புறம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட களியக்காவிளை பேரூராட்சி அளவிலான கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் களியக்காவிளை டவுன் பஞ்சாயத்து 164வது கிளைக் கமிட்டி கிளை செயலாளர் வினு தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் சுகுமாரி கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சதீஷ், களியக்காவிளை பேருராட்சி முன்னாள் தலைவர் ஜெகதிஷ், மேல்புறம் தெற்கு ஒன்றிய விவசாய அணி பொதுச் செயலாளர் மகாலிங்கம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.














